புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டை (சிபிஐ) அடிப்படையாக கொண்ட பணவீக்க புள்ளிவிவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, கடந்த நவம்பர் மாதம் 5.48 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த 4 மாதத்தில் இல்லாத குறைவான அளவாகும். இதுவே கடந்த ஆண்டு டிசம்பரில் 5.69 சதவீதமாக இருந்தது.
Advertisement