நாக்பூர்: இரானி கோப்பைக்கான டெஸ்ட் போட்டி நாக்பூரில், ரெஸ்ட் ஆப் இந்தியா - விதர்பா அணிகள் இடையே கடந்த 1ம் தேதி முதல் நடந்தது. முதல் இன்னிங்சில் விதர்பா 342, ரெஸ்ட் ஆப் இந்தியா 214 ரன்கள் எடுத்தன. பின், விதர்பா 2வது இன்னிங்சில் 232 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 361 ரன் இலக்குடன் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 2வது இன்னிங்சை ஆடியது. கடைசி நாளான நேற்று, ரெஸ்ட் ஆப் இந்தியா 267 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதனால், 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற விதர்பா, இரானி கோப்பையை கைப்பற்றியது.