மக்களின் உணர்வுகளுக்கும் மாநில வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வை பிரதமர் வழங்குவார் என நம்புகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
சென்னை: மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவினை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.