சென்னை: நீலகிரியில் தங்கும் விடுதி, ரிசார்ட்டுகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இரவு நேரத்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர், வன அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரவு நேரத்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது கொடூரமானது என்றும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது வன விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
+
Advertisement