சென்னை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் கிரேடு பி (டி.ஆர்.) அதிகாரிகள் தேர்வு அக். 18, 19 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 20ம் தீபாவளி என்பதால் தேர்வர்கள் சென்னை வந்து போவது சிரமமாக இருக்கும். ஆகவே பொருத்தமான பிந்தைய தேதிகளுக்கு தேர்வுகளை மாற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
அதற்கு, ரிசர்வ் வங்கியின் அதிகாரி, தேர்வு தேதிகள் பல்வேறு காரணிகளை முன்னிட்டு முடிவு செய்திருப்பதால் அதனை மாற்றுவது இயலாது என தெரிவித்துள்ளார். தேர்வர்கள் ஆழ்ந்த கவனத்துடனும், நிம்மதியான மனநிலையோடும் தேர்வுகளை எழுதுகிற வகையில் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளேன். எதிர்காலத்தில் எனது கருத்தை கவனத்தில் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் உடனடியாக தலையிட்டு இப்போதே தீர்வு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.