சென்னை: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) தலைவர் மயில் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் ஏற்கனவே மறியல் போராட்டத்தில் பங்கேற்றோம். 10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு அழைத்து பேசவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும். அரசாணை 243ல் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனையெல்லாம் சரி செய்ய வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி தலைமைச்செயலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.