மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.5 சதவீதமாக நீடிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறும்போது,’ வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இது 5.5 சதவீதமாகவே நீடிக்கும். பங்குகளை அடமானமாக வைத்து பெறப்படும் கடன்களுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல், ஐபிஓவை பொறுத்தவரை ஒரு நபருக்கான கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று கூறினார்.
+
Advertisement