ரெனால்ட் நிறுவனம், டிரைபர் பேஸ்லிப்ட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில், 1.0 லிட்டர் என்ஏ 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது. இது அதிகபட்சமாக 72 எச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய டயமண்ட் லோகோ,...
ரெனால்ட் நிறுவனம், டிரைபர் பேஸ்லிப்ட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில், 1.0 லிட்டர் என்ஏ 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது. இது அதிகபட்சமாக 72 எச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய டயமண்ட் லோகோ, புதிய வடிவமைப்புடன் ஹெட்லாம்ப், எல்இடி டிஆர்எல்கள் உட்பட தோற்றத்தைப் பொலிவுபடுத்தும் வகையில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 6 வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக துவக்க வேரியண்டான ஆதன்டிக் சுமார் ரூ.6.3 லட்சம் எனவும், டாப் வேரியண்டான எமோஷன் ஏஎம்டி சுமார் ரூ.9.17 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.