ரெனால்ட் நிறுவனம், கிகர் பேஸ்லிப்ட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.0 லிட்டர் என்ஏ மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்களில் கிடைக்கிறது. ஆதன்டிக், எவால்யூஷன், டெக்னோ, எமோஷன் என 4 வேரியண்ட்கள் உள்ளன. என்ஏ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 எச்பி பவரையும், டர்போ பெட்ரோல் இன்ஜின் 100 எச்பி பவரை வெளிப்படுத்தும். வேரியண்ட்களுக்கு ஏற்ப 5 ஸ்பீடு ஏஎம்டி, சிவிடி மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ்கள் இடம் பெற்றிருக்கும்.
நிலையான பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகள் உள்ளன. டாப் வேரியண்ட்டில் 360 டிகிரி கேமரா இடம் பெற்றுள்ளது. கிராபிக்ஸ், கிரில்கள், டூயல் டோன் அலாய்வீல் என பல வகையிலும் காரின் தோற்றம் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. 8 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவுக்க வேரியண்டான ஆதன்டிக் 1.0 என்ஏ பெட்ரோல் இன்ஜின் மேனுவல் வேரியண்ட் சுமார் ரூ.6.3 லட்சம் எனவும், டாப் வேரியண்டான எமோஷன் 1.0 டர்போ சிவிடி வேரியண்ட் சுமார் ரூ.11.3 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெக்னோ, எமோஷன் வேரியண்ட்களில் சில மாடல்களில் டூயல் டோன் வண்ணம் தேர்வு செய்தால் சுமார் ரூ.23,000 கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.