ரிலையன்ஸ் இன்ஸ்ப்ராஸ்டிரக்சர் அந்திய செலாவணி வழக்கு அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் ஈடி சோதனை
புதுடெல்லி: ரிலையன்ஸ் இன்ஸ்ப்ராஸ்டிரக்சர் நிறுவனத்துக்கு எதிரான அந்திய செலாவணி வழக்கில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. அனில் அம்பானி குழும நிறுவனமான இன்ஸ்ஃப்ராஸ்டர்சர் உள்பட அவரது பல குழும நிறுவனங்கள் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், அந்நிறுவனம் கூட்டு கடன்களை சிஎல்இ பிரைவேட் லிமிடெட் என்ற தொடர்புடைய நிறுவனத்தின் மூலம் கடன் தொகையை முறைகேடாக மாற்றி பயன்படுத்தியதாக செபி குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக அந்திய செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள் மோவ் ஆகிய இடங்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.