Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞருடனான உறவு 3 தலைமுறை தாண்டிய நெருக்கம் கொண்டது: கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: கலைஞருடனான உறவு 3 தலைமுறையை தாண்டிய நெருக்கம் கொண்டது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: என் அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசனையும் கவுரப்படுத்திய முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், துணை முதல்வரும் என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீஸனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்டமாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், கலைஞருடனான எனது உறவு 3 தலைமுறை தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்து கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.