சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் நலம் பெற்று தனது பணிகளை தொடர வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் முழுமையாக குணமடைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ‘பேஸ்மேக்கர்’ பொருத்தப்பட்டுள்ள அவர் நலம்பெற்று, மீண்டும் தமது வழக்கமான பணிகளை தொடங்க இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.