சூலூர்: கோவை சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கார் ஷோரூம் டிரைவர். இவரது மனைவி சங்கீதா (26). 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சங்கீதா சினிமா பாடல்கள், வசனம், காமெடிகளை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இது கணவருக்கு பிடிக்கவில்லை. ரீல்ஸ் மோகத்தில் இருக்க வேண்டாம் என்று கண்டித்ததோடு தடையும் விதித்ததாக கூறப்படுகின்றது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதில் விரக்தியடைந்த சங்கீதா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+
Advertisement


