கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் செய்தி குறிப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் 28ம் தேதி உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.
கூட்ட நெரிசலால் காயமடைந்த 110 நபர்களில், 51 நபர்கள் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனயில் 51 நபர்களும், தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் என மொத்தம் 60 பேருக்கு உயர்சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.