Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: 1971, 1984 மற்றும் 1989ம் ஆண்டு தேர்தல்களில், திமுக உறுப்பினராக தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் வென்றவரும், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட கழகத்தின் முன்னாள் செயலாளருமான ஆர்.சின்னசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

சின்னசாமி மூன்று முறை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர். மூத்த முன்னோடியாக, திமுகவின் முதுபெரும் உறுப்பினராக இருந்து, நமக்கு வழிகாட்டிய ஆர்.சின்னசாமி மறைவு தர்மபுரி மக்களுக்கும் கழகத்துக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.