ராயக்கோட்டை : ராயக்கோட்டை அருகேயுள்ள சின்னஉள்ளுக்குறுக்கை, முத்தம்பட்டி, சூடனூர், சூடேகவுண்டனூர் ஆகிய கிராம விவசாயிகள், குறுகிய கால பலன் தரக்கூடிய பீர்க்கங்காயை அதிகம் விளைச்சல் செய்துள்ளனர்.
இதற்கு குச்சிகள் நட்டு பந்தல் அமைத்து, பீர்க்கங்காய் விதை நட்ட 45 நாட்களிலேயே செடி, கொடியாக வளர்ந்து காய்களை விடுகிறது. சொட்டு நீர்ப்பாசனத்தில் வளரும் செடிகளுக்கு, மருந்து அடிக்க தேவையில்லை.
இதில் விடும் பீர்க்கங்காய்களை பறித்து, ராயக்கோட்டை மண்டிகளில் விற்பனைக்கு வைப்பதை வியாபாரிகள் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதையே சில்லரை வியாபாரிகள் மற்றும் உழவர் சந்தை போன்றவற்றில் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்கின்றனர்.
