சென்னை: நடிகர் ரவி மோகன் பங்களாவில் தனியார் வங்கி ஜப்தி நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளது. தனியார் பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கிவிட்டு திருப்பி தராததால் நடிகர் ரவி மோகனின் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இப்படியான நிலையில் நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் வாழ்ந்த வீட்டை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயம் ரவி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கடந்த பல மாதங்களாக அந்த வீட்டிற்கு செல்லாமல் இருந்த அவர், அந்தக வீட்டை வாங்கியதற்கான கடனுக்கான வங்கி தவணையையும் செலுத்தாமல் இருந்தார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 24ம் ேததி அவருக்கு ஜப்தி நோட்டீஸை வங்கி அனுப்பியபோது, அதை ரவி மோகன் திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து, இன்று காலை அவரது பங்களாவில் ஜப்தி நோட்டீஸை வங்கி நிர்வாகம் ஒட்டிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, மனைவி ஆர்த்தியை ரவி மோகன் பிரிந்துவிட்டார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.