சென்னை: புதிதாக படத் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ளார். திருப்பதிக்கு நேற்று சென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு முன்னதாக ஆசி பெற்று வந்தார். அப்போதும் கெனிஷா ரவி மோகனுடன் இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற ரவி மோகன் ஸ்டூடியோஸ் அறிமுக விழாவிலும் வெள்ளை நிற உடையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக வந்த காட்சிகள் வைரலாகியுள்ளன. இந்த விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ரவி மோகனின் அம்மா மகாலட்சுமி, அவரது அண்ணன் ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.
நடிகர்கள் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், ரிதேஷ் தேஷ்முக், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, நடிகை ஜெனிலியா உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரவி மோகன், ‘‘முதல் முறையாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 2 படங்களை தயாரிக்கிறேன். இதில் ஒரு படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார். அந்த படத்தை நான் இயக்குகிறேன். இந்த விழாவுக்கு வந்து என்னை வாழ்த்திய திரையுலக நண்பர்களுக்கு நன்றி. இது எனது வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள்’’ என்றார். இரு படங்களின் பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது.