பாலியல் குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ராப் பாடகர் சீன் டிடிக்கு 4 ஆண்டு சிறை: நீதிபதி அருண் சுப்பிரமணியன் தீர்ப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல ராப் இசைப் பாடகர் சீன் டிடி (55). ரசிகர்களால் கோம்ப்ஸ் என்ற புனைப் பெயருடன் அறியப்படும் இவர், தனது தோழிகள் மற்றும் ஆண்களை பாலியல் தொழிலாளர்களாக நாடு முழுவதும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓராண்டாக சிறையில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்த மான்ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருண் சுப்பிரமணியன் கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.
பாலியல் சந்திப்புகளுக்காக பலரையும் சீன் டிடி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதத்தையும் விதித்தார். அப்போது சீன் டிடி தனக்கு மன்னிப்பு வழங்கும்படி மன்றாடி கேட்டுக் கொண்டார். நீதிபதி அருண் சுப்பிரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.