மதுரை: தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகை மீரா மிதுன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகாரில் நடிகை மீதும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தினமும் 20 மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் கூறியுள்ளார். வழக்கை ரத்து செய்யக் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
+
Advertisement


