கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரஞ்சி கோப்பை முதலாவது லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷண் அதிரடியாக விளையாடி 173 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர் பாலசுப்பிரமணியம் சச்சின் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறி வருகிறது. அம்பரிஷ், ஷாருக்கான் களத்தில் உள்ளனர். ஜார்க்கண்ட் அணியின் ஜதின் பாண்டே 3 விக்கெட், ஷகில் ராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது.