ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வாலாஜா கிழக்கு வட்டார வள மையம், குறு வள மையம் அளவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்துரை, வட்டார கல்வி அலுவலர் லதா, தலைமையாசிரியர் தென்றல், ஆசிரியர் பயிற்றுநர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினர்.
இதில் வண்ணம் தீட்டுதல், கதை கூறுதல், திருக்குறள் ஒப்புவித்தல், தனி நடனம், பரதம், களிமண்ணால் சிற்பம் வடிவம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 400 மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.