ரேஞ்ச் ரோவர், வெலார் ஆட்டோபயோகிராபி என்ற சொகுசு எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் பி250 பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 184 கிலோவாட் பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதபோல் 2.0 லிட்டர் டி200 மைல்டு ஹைபிரிட் டீசல் இன்ஜினிலும் கிடைக்கிறது.
இது அதிகபட்சமாக 150 கிலோவாட் பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஹீட் மற்றும் மசாஜ் வசதி கொண்ட சீட்கள், ஸ்லைடிங் பனோரமிக் சன்ரூப், பின்புறம் பவர் ரெக்லைன் சீட்டுகள், எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், அடாப்டிவ் டைனமிக் மற்றும் 3டி சரவுண்ட் கேமரா சிஸ்டம் உட்பட பல நவீன அம்சங்களுடன் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.89.9 லட்சம்.