ராஞ்சி: ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானத்தின் வால்பகுதி தரையில் உரசியதால் பதற்றம் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார். 7.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் புவனேஷ்வர் -ராஞ்சி விமானம் சுமார் 70 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் வால்பகுதி ஓடுபாதையுடன் உரசியது.
இதனால் விமானம் குலுங்கிய நிலையில் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் பயணிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து புவனேஷ்வருக்கு விமானத்தின் அடுத்த புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. சில பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். சிலர் தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக்கொண்டனர். சிலர் சாலை மார்க்கமாக புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


