புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோயிலின் பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் மோடி இன்று காவிக்கொடியை ஏற்றிவைக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘பத்து அடி உயரமும் இருபது அடி நீளமும் கொண்ட வலது முக்கோணக் கொடியை பிரதமர் ஏற்றி வைக்கிறார்கள. அதில் கோவிதார மரத்தின் உருவத்துடன் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது கோயிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதையும் குறிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement



