ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடந்த 2021-22ல் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி, படகின் உரிமையாளர்கள் இலங்கை ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2023 மார்ச் மாதம் 12 படகுகளை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு வர இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு மீனவர்களுக்கு அனுமதி அளித்தது.
இதனால் இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 12 விசைப்படகுகளின் தற்போதைய நிலையை பார்வையிட, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா உட்பட 14 மீனவர்கள் இன்று விசைப்படகில் புறப்பட்டு செல்கின்றனர்.