ராமேஸ்வரம்: தமிழக கடலோர பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும் அதிலிருந்து 5 மீனவர்களை இலங்கை கடல்படையினர் சிறை பிடித்தார்கள். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததால் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்பொழுது அந்த 5 மீனவர்களுக்கு இன்று நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில் மீண்டும் 5 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். ஆஜர் படுத்தப்பட்ட 5 மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி 2 மீனவர்களுக்கு தலா ரூ. 2. 5 லட்சம் அபராதம் விதித்தார்கள்.
மீதம் உள்ள 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தார்கள். படகு உரிமையாளர் இரண்டாவது முறையாக மீன்பிடித்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை விதித்தார்கள். விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களும் அபராத தொகை கட்டிய உடனே விடுதலை செய்வார்கள் என தமிழகம் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.