ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 22ம் தேதி முனியசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் தங்கராஜ் (40), லிங்கம் (59), செல்வம் (50), இருளாண்டி (50) ஆகியோரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்களது காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து 4 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மீனவர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் கடந்த ஜூலை 13ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களுக்கு செப்.24 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement