ராமநாதபுரம்: ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சினை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. ரயில் எஞ்சினை இயக்கி சோதனை நடைபெறுவதால் ரயில் பாதை அருகே மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - ராமநாதபுரம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றது. சோதனைக்காக புதிய மின் ரயில் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
+
Advertisement