Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதி ரத்து

சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது ONGC-க்கு விளக்கம் கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. கிணறுகளை தோண்ட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ONGC நிறுவனம் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பித்திருந்தது. மனு வை பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சோதனை அடிப்படையில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ONGC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு அரசி நிதி மற்றும் கால நில மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனடியாக திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அரசு அறிவுறுதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அறிவிப்பின் படி அனுமத்தியை திரும்ப பெறுவதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது.

ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை அமைக்க அளித்த அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது என விளக்கம் அளிக்க கோரி ONGC மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசுக்கு ONGC அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக அனுமதியை ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.