திண்டிவனம்: சென்னையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் இல்ல நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க கடந்த 13ம் ேததி சென்னை சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டம் திரும்பினார். அப்போது ராமதாசிடம் செய்தியாளர்கள் ஜி.கே.மணி அன்புமணியை சந்தித்து பேசி உள்ளாரே என கேட்டபோது, அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை கேட்டுவிட்டு நாளை பதில் கூறுகிறேன் என்றார்.
சென்னையில் அன்புமணி அவரது தாயாரை சந்தித்து குறித்து கேட்டபோது, அம்மா, பிள்ளையை பார்ப்பதும், பிள்ளை அம்மாவை பார்ப்பதும் சகஜமான ஒன்று தான்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது காத்திருப்போம்... காத்திருப்போம்.. காலங்கள் வந்துவிடும்.. என ராகத்துடன் பதில் கூறினார். இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ளன மோதல் போக்கு எப்படி போய்கிட்டு இருக்கு என்ற கேள்விக்கு மோதலும் இருக்கும் தேர்தலும் வரும் அதனை சந்திப்போம் என்றார்.