ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம் கூடியது: அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை
விழுப்புரம்: தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, முரளி சங்கர், ஸ்ரீகாந்தி உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ளனர். பாமக நிர்வாக குழு உறுப்பினர் எல்.எல்.ஏ. அருள், பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. 16 குற்றச்சாட்டு பற்றி விளக்கம் தர அன்புமணிக்கு ஆக.19ல் நோட்டீஸ் அனுப்பியது ஒழுங்கு நடவடிக்கை குழு. நோட்டீஸுக்கு அன்புமணி பதில் தராத நிலையில் பாமக நிர்வாகக் குழு கூடுகிறது. அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியது.