திண்டிவனம்: பாமக மாநில இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி - ராமதாஸ் மோதல் நடந்துவரும் நிலையில் மீண்டும் தமிழ்க்குமரன் நியமனம். தமிழ்க்குமரனிடம் நியமன உத்தரவை ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி வழங்கினார்
பாமக இளைஞரணித் தலைவர் பதவி என்பது அன்புமணி ராமதாஸ் வகித்த பதவி என்பதால் அதனை பெறுவதற்கு பலரும் முயற்சித்த நிலையில் கடைசியில் ஜி.கே.மணியின் கை ஓங்கியுள்ளது. பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் தலைவராக புரோமோஷன் பெற்றார்.
இதையடுத்து அவர் வகித்து வந்த இளைஞரணித் தலைவர் பதவியை கைப்பற்ற பாமக முன்னணி நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டினர். படித்த, நிர்வாக திறமைமிக்க ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து தேடலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அன்புமணிக்காக பாமகவில் தலைவர் பதவியை ராஜினாமா செய்து வழிவிட்டு ஒதுங்கிக் கொண்ட ஜி.கே.மணி தனது மகன் தமிழ் குமரனை பாமக இளைஞரணித் தலைவராக்க விரும்பினார். இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். பாமக இளைஞரணித் தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ் குமரனை நியமித்த ராமதாஸ் அதற்கான நியமன கடிதத்தை வழங்கினார்.
அன்புமணிக்கு பிறகு பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்க்குமரன் 2022-ல் பதவி விலகினார். அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக தமிழ்க்குமரன் பதவி விலகியதாக அப்போது தகவல் வெளியானது. தமிழ்க்குமரனுக்குப் பிறகு இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். எனது 3வது பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டபோது என் மீது மைக் பாய்ந்தது. தனது சொந்த சகோதரி மகன் முகுந்தனை அன்புமணி ஏற்கவில்லை.