திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக இணை செயலாளரும், சேலம் மேற்கு எம்எல்ஏவுமான அருள் சந்தித்து பேசினார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,‘கடலூரில் ராம்தாஸ் கண் கலங்கியது ஒவ்வொரு வன்னியர் மற்றும் பெண்களின் மனதையும் குத்தி கிழித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தொலைப்பேசியிலும், சமூக வலைதளத்திலும் கேவலமாக பேசுகிறார்கள். ராமதாசின் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கட்சியில் அன்புமணியின் உழைப்பு ஏதும் இல்லை. ஆனால் ரத்தத்தை வியர்வையாக சிந்தியவர் ராமதாஸ். பாமகவின் கொடியை தொடர்ந்து பயன்படுத்துவேன். நான் பாமகவின் சட்டமன்ற கொறடா என்பதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ராமதாஸ் தான் கட்சி என ஒரு உத்தரவை நீதிமன்றம் வழங்கும்’ என்றார்.
+
Advertisement

