பீகாரில் மொத்தமுள்ள 16 மாநிலங்களவை இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமானது தற்போது 5 இடங்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் ஒரு மாநிலங்களவை இடம் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்பிக்களான பிரேம் சந்த் குப்தா மற்றும் ஏடி சிங் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகின்றது.
இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் ஹரிவன்ஷ், ராம்நாத் தாகூர் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் உபேந்திர குஷ்வாகா(ஆர்எல்எம்) ஆகியோரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகின்றது. 5 எம்பி இடங்களுக்கான தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 42 வாக்குகள் தேவைப்படுகின்றது. இதனால் அனைத்து இடங்களும் பா.ஜ கூட்டணிக்கு செல்கிறது.


