Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நான் யாரு... என் தந்தையை தெரியுமா? என்று கூறி குடிபோதையில் பெண் யூடியூபரிடம் ரகளை: எம்.என்.எஸ் கட்சி தலைவர் மகன் மிரட்டல்

மும்பை: மராத்தி மொழி விவகாரத்தில் குடிபோதையில் பெண் யூடியூபரிடம் ரகளையில் ஈடுபட்ட எம்.என்.எஸ் கட்சி நிர்வாகியின் மகன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிரபல பெண் யூடியூபரும், நடிகை ராக்கி சாவந்தின் முன்னாள் தோழியுமான ராஜ்ஸ்ரீ மோரே, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘மகாராஷ்டிராவில் மராத்தி மொழியைத் திணிப்பதை விமர்சித்ததுடன், உள்ளூர் மராத்திய மக்கள் கடினமாக உழைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வெளிமாநிலத்தவர் மும்பையை விட்டு வெளியேறினால் மராத்திய சமூகத்தினர் சிரமப்படுவார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். மராத்தி பெண்மணியான ராஜ்ஸ்ரீயின் இந்தக் கருத்து, பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது. தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், ‘என்னை 200 பேர் கொண்ட கும்பல் மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டுகிறது. மராத்தி பெண்ணையே இந்த மராத்தியவாதிகள் குறிவைக்கிறார்கள்.

மன்னிப்பு கேட்காவிட்டால் எனது ஸ்டுடியோவை உடைத்துவிடுவதாக மிரட்டினார்கள். மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்று நான் குரல் கொடுத்ததற்காகவே குறிவைக்கப்படுகிறேன்’ என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாக, தற்போது ராஜ்ஸ்ரீ மோரே மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சியின் தலைவர் ஜாவேத் ஷேக்கின் மகன் ரஹீல், குடிபோதையில் தனது காரை வேண்டுமென்றே இருமுறை இடித்து சேதப்படுத்தியதாக ராஜ்ஸ்ரீ மோரே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அரை குறை ஆடையுடன், கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை ரஹீல் திட்டினார். ‘நான் யார் தெரியுமா? என் தந்தை யார் தெரியுமா? நான் எம்.என்.எஸ் கட்சியைச் சேர்ந்தவன்’ என்று அதிகாரத் தோரணையில் பேசினார்.

காவல்துறை முன்பே என்னைத் தாக்க முயன்றார். காரை மோதியதற்கு இழப்பீடு வேண்டுமானால் ராஜ் தாக்கரே வீட்டிற்குச் சென்று கேட்டுக்கொள் என்றும் கூறினார். எனது காரை குறிவைத்துத் தாக்கியது ஏன்? எனக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது? இந்த குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கண்ணீருடன் முறையிட்டுள்ளார். இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.