சென்னை: நடிகர் ரஜினிகாந்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென சந்தித்துப் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக திரையுலகில் கால்பதித்த அவர், தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார். அவரின் 171-வது திரைப்படமான ‘கூலி’ கடந்த வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்தின் சந்தித்துள்ளார். ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ரஜினியிடம் நயினார் நாகேந்திரன் பேசியதாக கூறப்படுகிறது.