சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘கூலி’. இதில் ரஜினிகாந்த், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
‘கூலி’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளை தியேட்டர்கள் நடத்திக் கொள்ளலாம். முதல் காட்சிகளை காலை 9 மணிக்கு தொடங்கி, கடைசி காட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ‘கூலி’ திரைப்படத்தை நாளை மொத்தம் 5 காட்சிகளாக தமிழக தியேட்டர்கள் திரையிடலாம்.