சென்னை: நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ‘‘இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான தருணம். நம் மகளிர் அணி வருங்கால தலைமுறைக்கு தங்களது தைரியத்தை காட்டியுள்ளனர். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் இந்தியாவின் மூவர்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்’’ என்று தெரிவித்துள்ளார்.
+
Advertisement 
 
 
 
   