ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பில்வாராவின் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி தேவி. இவரது மூன்று மகள்கள் இறந்த பிறகு கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் தனியாக வசித்து வந்தார். இதேபோல் பெற்றோரை இழந்த இஸ்லாமிய இளைஞர் அஸ்கர் அலிகான் சாந்தியை தனது தாயாக கருதி பராமரித்து வந்தார். இந்நிலையில் சாந்தி திடீரென உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மத்தியப்பிரதேசத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்கர் ஒரு மகனாக இருந்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை செய்து முடித்துள்ளார். அந்த தெருவில் வசிக்கும் இதர இஸ்லாமிய குடும்பங்களும் சாந்தியின் இறுதிச்சடங்குகளில் கண்ணீர் மல்க பங்கேற்றுள்ளனர். சாந்தி தேவியின் அஸ்தி அவரது விருப்பத்துக்கு ஏற்ப திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்படும் என்று அஸ்கர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement