ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு நேற்று முன்தினம் தனியார் பேருந்து சென்றது. ஜெய்சால்மர் நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஜோத்பூர் எம்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான். இதனால் பலி 21 ஆக உயர்ந்துள்ளது.
+
Advertisement