Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ராஜஸ்தான் பாரில் 20% பசு வரி அறிமுகம்: சமூக வலைதளங்களில் வைரல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் ஒருவர் கடந்த 30ம் தேதி ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உள்ள பாரில் 6 பீர் அருந்தியுள்ளார். பீர் மற்றும் சைட் டிஷ்சுக்கு ரூ.2650 ஆகியுள்ளது.

அதை தவிர ஜிஎஸ்டி, மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் பசு வரி என கூடுதலாக ரூ.612 விதித்துள்ளனர். இது குறித்து வாடிக்கையாளர் கேட்ட போது ராஜஸ்தானில் மதுபானங்கள் அருந்தினால் 20 % பசு வரி விதிக்கப்படுவதாக ஓட்டல் மேலாளர் நிகில் பிரேம் விளக்கம் அளித்துள்ளார். மது அருந்துபவர்களுக்கு பசு வரி விதிக்கப்பட்டதற்கான பில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.