சென்னை: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டடங்களை பராமரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கட்டடங்களின் சுவர்களிலும், அருகிலும் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற உத்தரவிட்டது. செடிகள் அகற்றப்பட்ட பகுதியில் நீர் புகாமல் பூச்சு செய்ய அறிவுறுத்தப்பட்டது. பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்.
+
Advertisement
