சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்று முன்தினம், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை; அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசு உடனடியாக வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்.