சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 6ம் தேதி வரை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் 3ம் தேதி கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். 3ம் தேதி விழுப்புரம், கடலூர், 4ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூரில் கனமழை பெய்யும். இதேநிலை 6ம் தேதி வரை நீடிக்கும்.