Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழை, பாக். வீச்சுக்கு இடையில் வெஸ்ட் இண்டீஸ் பதிலடி

டரோபா: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் பாக் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2வது ஒரு நாள் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள டரோபா நகரில் இந்திய நேரப்படி நேற்று காலை முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச, பாக் முதலில் மட்டையை சுழற்றியது.

வெ.இ பந்து வீச்சு ஒருப்பக்கம் என்றால், மழை மறுப்பக்கம் பாக். ரன் குவிப்புக்கு இடையூறு செய்தன. முதல் 2 முறை நிறுத்தப்பட்ட ஆட்டம் மழை நின்றதும் முறையே 1.00, 1.45 மணி நேரம் தாமதமாக தொடங்கின. தொடர்ந்து 3வது முறையும் மழையால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் பாக் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது பாக் 37ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 171ரன் எடுத்திருந்தது. அணியில் அதிகபட்சமாக நவாஸ் ஆட்டமிழக்காமல் 36, ஹூசைன் 31ரன் எடுத்திருந்தனர். வெ.இ வீரர்களில் ஜெய்டன் சீல்ஸ் சிக்கனமாகவும் பந்து வீசி, 3விக்கெட்டும் அள்ளியிருந்தார்.

அடுத்து ஆடத் தொடங்கிய வெ.இ அணிக்கு டக்வொர்த் லிவீஸ் முறையில் 35ஓவரில் 181ரன் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாக் 35வது ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 146ரன் தான் எடுத்திருந்தது. எனவே கூடுதல் இலக்குடன் களமிறங்கிய வெ.இக்கு ஆரம்பம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அடுத்தது வந்தவர்கள் பொறுப்புடன் விளையாட வெ.இ 33.2ஓவரிலேயே 5விக்கெட் இழப்புக்கு 184ரன் என இலக்கை கடந்து 5விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்ற்து.

அந்த அணியின் கேப்டன் ஹோப் 32, ரூதர்ஃபோர்ட் 45 ரன்னும், ஆட்டமிழக்காமல் ரோஸ்டன் சேஸ் 49, ஜஸ்டின் கிரெவ்ஸ் 26ரன்னும் எடுத்தனர். பாக் தரப்பில் ஹசன், நவாஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பாக் அணியிடம் முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு வெ.இ பதிலடி தந்ததால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு தொடங்குகிறது.