ஸ்ரீவில்லிபுத்தூர்: காளான்களில் நாய் குடை காளான், முட்டை காளான், சிப்பி காளான், பூச்சை காளான் என ஏராளமான வகைகள் உள்ளன. இவைகளில் ஒரு சில காளான்கள் உணவாக பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. சில காளான்கள் நச்சுத்தன்மை கொண்டவை. காளான்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் வயல்கள், குளக்கரை ஓரங்களில் முளைக்கும். விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஏராளமான காளான்கள் பல வண்ணங்களில் வளர்ந்துள்ளன. இவை காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதியில் பல வண்ணங்களில் காளான்கள் வளர்ந்துள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த காளான்களை உணவாக பயன்படுத்த முடியாது’ என்றனர்.


