சென்னை: கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் நீர்நிலைகள், அணைகளை கண்காணிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்வளத்துறையின் கீழ் உள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகளில் உள்ள நீரின் அளவு மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை முழு கொள்ளளவில் இருந்து 10-20% நீர் இருப்பை குறைக்க அறிவுறுத்தினார். நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்ய ஜேசிபி, மணல் மூட்டைகளை இருப்பில் வைக்க வேண்டும் எனவும் திருச்சி, டெல்டாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கனமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.



