ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் ரயில் நேற்று முன்தினம் அதிகாலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து, காலை 6.34 மணியளவில் வழுதூர் ரயில்வே கேட் அருகே சென்ற போது சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதி வழியில் நின்றது. ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைப் பார்த்த லோகோ பைலட், ரயிலில் இருந்து இறங்கிச் சென்று, கேட் கீப்பர் பணியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஜெயசிங் மீனாவிடம் கேட்டை மூடுமாறு கூறினார்.
இதையடுத்து அவர் கேட்டை மூடினார். அதன்பின் 5 நிமிடங்கள் கழித்து ரயில் மதுரை புறப்பட்டுச் சென்றது. இதுபற்றி லோகோ பைலட் புகாரின் பேரில், பணியில் கவனக்குறைவாக இருந்த கேட் கீப்பர் ஜெயசிங் மீனாவை காரைக்குடி உதவி கோட்ட பொறியாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.