டெல்லி: ரயில்வே உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் ஏன்? என திமுக எம்.பிக்கள் சி என் அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளனர். மிஷன் ராஃப்டார் திட்டத்தின்கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக கடந்த பத்தாண்டுகளில் சரக்கு மற்றும் அஞ்சல்/விரைவு ரயில்களின் சராசரி வேகம் 110 கிமீ மற்றும் 130 கிமீயாக அதிகரித்துள்ளதை குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
புதிய பாதைகள் அமைப்பது, மாற்று பாதை உண்டாக்குவது உட்பட தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு இரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அதன் நிதி ஒதுக்கீடு உட்பட வெளியிட வேண்டும் என்றும் மிஷன் ரஃப்தார் மற்றும் தமிழ்நாட்டில் தொடர்புடைய உள்கட்டமைப்பு திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்ற அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.


